Published : 07 Feb 2024 04:10 AM
Last Updated : 07 Feb 2024 04:10 AM

மதுரை பனகல் சாலைக்கே விமோசனம் இல்லையா? - ஓராண்டாக உருக்குலைந்து காணப்படுவதால் திண்டாட்டம்

உருக்குலைந்து காணப்படும் மதுரை கோரிப்பாளையம் பனகல் சாலை. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரையில் ஆட்சியர், முதல் அமைச்சர்கள் வரை தினமும் சென்று வரும் கோரிப்பாளையம் பனகல் சாலை கடந்த ஓராண்டாக உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் நோயாளிகள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் அவதி தொடர்கிறது.

மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடைப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இதனால் அனைத்து சாலை களும் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மாற்று சாலையை பயன்படுத்தக்கூட வழியின்றி நகர்வாசிகள் திணறி வரு கின்றனர். கிட்டத்தட்ட நகரின் அனைத்து சாலைகளின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலை இதற்கு சிறந்த உதாரணம்.

ஆட்சியர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அன்றாடம் பயணிக்கும் இந்த சாலையே இவ்வளவு மோசமாக இருக்கும் எனில் மற்ற சாலைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதிகாரிகள் நினைத்தால் ஒரேநாளில் சாலையை சீரமைத்து விடலாம். தமிழகத்தில் வேறு எங்கும் ஆட்சியர் அலுவலகம் அருகே முக்கியமான சாலை இவ்வளவு மோசமாக இருப்பதை பார்க்க முடியாது. கண்கண்ட சாட்சியாக உருக்குலைந்து காணப்படும் பனகல் சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏன் உத்தரவிடவில்லை.

இவர்கள் எப்படி நகரில் சேதமடைந்துள்ள மற்ற சாலைகளை சீரமைப்பர் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அலுவலக கோப்புகளில் கையெழுத்தி டுவது, அரசு ஆலோசனைக் கூட்டங்கள், அரசு விழாக்களில் பங்கேற்பதோடு மட்டும் ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கடமை முடிந்து விடுவதில்லை. மக்களின் அன்றாட பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தீர்வுகாண முயற்சிப்பதே அவர்களின் முக்கிய கடமையாகும். இந்த பனகல் சாலை கோரிப்பாளையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலக சந்திப்பு வரை மாநகராட்சி சாலையாக உள்ளது.

ஆட்சியர் அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையும் மிக மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் நோயாளிகள் படும் சிரமம் சொல்லி மாளாது. சில நேரங்களில் முன்னால் செல்லும் வாகனங்கள் திடீர் பிரேக் போடும் போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

விபத்துகளில் காயமடைந்து ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படும் நோயாளிகளையும் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மருத்துவமனையில் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர், பணியாளர்கள் பனகல் சாலை போக்குவரத்து நெரிசலை கடந்து சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியவில்லை. அதனால் இந்த சாலையில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x