Published : 07 Feb 2024 04:06 AM
Last Updated : 07 Feb 2024 04:06 AM
விழுப்புரம்: சுதந்திர போராட்ட வீரரும், கம்யூ னிஸ்ட் இயக்கத் தலைவருமான சங்கரய்யா படத்திறப்பு விழா விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு படத்தை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் பணியை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி முறியடிக்கும். பிரதமர் மோடி மக்களவையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதைப் போல் பேசியிருக்கிறார். ‘300, 400 இடங்களைபிடிப்போம்' என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள இடத்தையும் அவர் விட்டுவிட்டார். தமிழகத்தில் அவர்கள் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது.
சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்ட போது தமிழக அரசு ரூ.37,000 கோடி நிவாரண நிதி கேட்டது. அமித்ஷா, ‘உடனடியாக வழங்குவோம்' என்று தெரிவித்ததோடு சரி, ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற, உதவி செய்ய நேரம் ஒதுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. யாராவது வருவார்களா என்று அதிமுக-வினர் கடை விரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணியைப் பிரிக்கலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித் தாலும் முறியடிப்போம். கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் கூடுதல் இடம் கேட்டிருக் கிறோம். தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளோம். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரும் என்று கூறுகின்றனர்.
எப்போது தேர்தல் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மாநிலங்களுக்கான உரிமையை பாதுகாக்க, மோடி அரசை கண்டித்து கேரள முதல்வர் தலைமையில் டெல்லியில் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தோழமை கட்சிகள் பங்கேற்கின்றன. கூட்டணிக்காக அனைத்து பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவை எதிர்ப்பவர் களை வருமான வரித் துறையை வைத்து மிரட்டுகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணைய கமிஷன் அமைக்கும் முறையை மோடி அரசு மாற்றியுள்ளது. 90 சதவீத நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சீட்டு முறைதான் உள்ளது என்று தெரிவித்தார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ராம மூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT