Published : 04 Feb 2024 06:06 AM
Last Updated : 04 Feb 2024 06:06 AM
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: வரும் மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழக மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது. தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லதுdmkmanifesto2024@dmk.in என மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 என்ற ஒரு சிறப்புஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரலாம்: இந்த தொலைபேசி எண்தொடர்பு மூலம் திமுக தேர்தல்அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ள தயாராக உள்ளது. #DMKManifesto2024 என்றஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளைபேஸ்புக் பக்கம் - DMKManifesto2024அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வரவிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின்பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.
உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ம் தேதி வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT