Last Updated : 28 Feb, 2018 10:25 AM

 

Published : 28 Feb 2018 10:25 AM
Last Updated : 28 Feb 2018 10:25 AM

சிதம்பரமும் காஞ்சி ஜெயேந்திரரும்! தில்லை நடராஜருக்கு அபிஷேகம் இன்று

சிதம்பரம் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு முறை அபிஷேகம் நடைபெறும். மாசி சதுர்த்தசி நாளான இன்று நடராஜருக்கு ஆறாவது அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த வேளையில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மரணம் அடைந்திருக்கிறார் என்று சொல்லி நெகிழ்கின்றனர் சங்கர மடத்தின் பக்தர்கள்.

கடந்த 2014ம் வருடத்தில் காஞ்சி ஜெயேந்திரர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்திருந்தார். நடராஜர் கோயிலுக்குள் தனிக்கோயிலாக அமைந்திருக்கும் பாண்டிய நாயகர் கோயிலில், சங்கர மடத்தின் சார்பில் 4 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சிதம்பரம் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெயேந்திரருக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது. மேளதாளத்துடன் அழைத்துச் சென்றார்கள். அதையடுத்து சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் பேசியதாவது, ‘நடராஜர் கோயிலில் தனிக்கோயிலாக உள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில், காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் முழுமையாக திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். 3 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குபவர்களுக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் அங்கு கட்டிடம் கட்டி வேத பாடசாலை மற்றும் பள்ளி அமைத்து தரப்படும் என்றார்.

காஞ்சி ஜெயேந்திரர், இதற்கு முன்பாக சிதம்பரம் திருத்தலத்துக்கு வந்திருக்கிறார்.

சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும். அடுத்து ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தின் போது அபிஷேகம் நடைபெறும்.

அதன் பிறகு ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். புரட்டாசியிலும் வளர்பிற சதுர்த்தசி வேளையில் அபிஷேகமும் மார்கழியில் திருவாதிரையிலும் அபிஷேகம் நடைபெறும். ஆறாவதாக, மாசி வளர்பிறை சதுர்த்தசியில் அபிஷேகம் நடைபெறும். அதாவது மாசியில் நடைபெறும் அபிஷேகம்... அந்த வருடத்தின் நிறைவு அபிஷேகம்!

அந்த வகையில், இன்று 28.2.18 புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி நாளில், தில்லையம்பலத்தானுக்கு, திருச்சிற்றம்பல நாயகனுக்கு நடராஜபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த நாளில், மாசி சதுர்த்தசி நாளில், நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் நன்னாளில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பதை சோகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x