Published : 27 Jan 2024 02:31 PM
Last Updated : 27 Jan 2024 02:31 PM
சென்னை: திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
> திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.
> அதேநேரம், திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.
> மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.
> திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.
> சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
> சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.
> மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.
> சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
> சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT