Published : 20 Jan 2024 07:20 PM
Last Updated : 20 Jan 2024 07:20 PM
சென்னை: பல்லாவரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாடுகள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ஆண்டோ மற்றும் மெர்லின் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ வீடு திருவான்மியூரில் உள்ளது. அவ்வீட்டுக்கு வீட்டு வேலை செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த பட்டியலின சிறுமியை அவரின் பெற்றோரிடம் உங்கள் மகளை மேற்படிப்பு படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி எம்.எல்.ஏவின் மகனும் மருமகளும் கடந்த ஏப்ரல் மாதம் அழைத்துச்சென்றுள்ளனர்.
ஆண்டோவின் மனைவி மெர்லின் அந்த சிறுமிக்கு சூடு போடுவது கண்மூடித்தனமாக தாக்குவது நிர்வாணப்படுத்துவது சாதி ரீதியாக இழிவாக பேசுவது பொருளாதார ரீதியாக எதுவும் இல்லாதவள் தானேஎன்று இழிவுபடுத்துவது போன்ற மிகக் கொடூரமான சித்தரவதைகள் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக. பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஏற்ப்ட்ட காயங்கள் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ஆண்டோ மற்றும் மெர்லின் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இந்திய மாதர் சம்மேளனம் வலியுத்துவதோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும் வழங்கவும், அச்சிறுமியின் மேற்படிப்புக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT