Published : 20 Jan 2024 07:48 AM
Last Updated : 20 Jan 2024 07:48 AM

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு மாநில கலைஞர்களின் நடன ஒத்திகை மற்றும் காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆகியவை சென்னை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்றன. படங்கள்: ம.பிரபு

சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலையில் உள்ளஉழைப்பாளர் சிலை அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியைஏற்ற உள்ளார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், வல்லுநர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

4 நாள் ஒத்திகை: குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனவரி 19, 22, 24 ஆகிய 4 நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை அணிவகுப்பு ஒத்திகை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

போக்குவரத்து மாற்றம்: தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள், போலீஸார், துணை ராணுவப் படையினர், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பைச்சேர்ந்தவர்கள் பேண்ட், வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதேபோல், வரும் 22 மற்றும் 24-ம் தேதியும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் நாட்களிலும், குடியரசு தினம் அன்றும் மெரினா கடற்கரை காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x