Published : 18 Jan 2024 06:24 PM
Last Updated : 18 Jan 2024 06:24 PM
சென்னை: 'கழுகு' என பெயரிடப்பட்ட 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை இன்று தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026-ல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'கழுகு' கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை இன்று தொடங்கியது மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
"ஃபிளமிங்கோ" என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் 01.09.2023 அன்றுசுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வழித்தடம்-4-ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (downline) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது. 'கழுகு' என பெயரிடப்பட்ட அதன் இணையான சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (upline) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026-ல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன்(கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் மற்றும் AEON நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment