Published : 24 Aug 2014 10:28 AM
Last Updated : 24 Aug 2014 10:28 AM

மதுரையில் வழக்கறிஞர் படுகொலை: வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் காதலி ஆத்திரம்

தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வழக்கறிஞரை பெண் கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் காமயன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் கருணாகரன். விவசாயியான இவருக்கும், ஜெயந்தி (32) என்ப வருக்கும் திருமணமாகி சஞ்சீவி (10), தனுஷ் (9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலை யில், சில ஆண்டுகளுக்கு முன் நில பிரச்சினை தொடர் பாக, அருகிலுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன்(30) என்பவரை கருணாகரன் அணுகினார்.

பின்னர் வழக்கு தொடர்பாக சென்று வரும்போது மனைவி ஜெயந்தியையும் உடன் அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஜெயந்திக்கும், வழக்கறிஞர் ராமச்சந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினையால் 2008-ம் ஆண்டு கருணாகரன், ஜெயந்தி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் குழந்தைகளை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு, வழக்கறிஞர் ராமச்சந்திரனுடன் ஜெயந்தி வசிக் கத் தொடங்கினார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத நிலையில், ஊர் ஊராக சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதன்படி கடந்த சில மாதங்களாக மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர்.

இந்நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த ராமச் சந்திரன் தன்னை விட்டுச் சென்றுவிடும்படி ஜெயந்தியிடம் கூறியுள்ளார். இதனால் இரு வருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படத் தொடங் கியது. ஆக. 21-ம் தேதி மதியம் மது போதையில் இருந்த ராமச்சந்திரன் ஜெயந்தியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் உடனே தாய் வீட்டுக்கு செல்லாவிட்டால் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அப்போது அமைதி காத்த ஜெயந்தி, சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் தூங்கியதும் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத் திலேயே இறந்தார். அதன்பின் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறிய ஜெயந்தி, அம்மிக்கல் மற்றும் வீட்டு சாவியை அருகிலுள்ள கிருதுமால் நதியில் வீசினார்.

பின்னர் அங்கிருந்து சென்று ரயில் நிலையம், பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் 2 நாட்களாக பதுங்கியிருந்த அவர் சனிக்கிழமை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த விவரங்களைக் கூறினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீ ஸார் கிருதுமால் நதிக்குச் சென்று அங்கு கிடந்த அம்மிக்கல் மற்றும் சாவியைத் தேடி எடுத்தனர். பின்னர் வீட்டைத் திறந்து, சிதைந்த நிலையில் கிடந்த ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்தனர். இச்சம்பவம் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கெஞ்சியும் கேட்காததால் கொன்றேன்’

போலீஸாரிடம் ஜெயந்தி அளித்த வாக்குமூலத்தில், ‘ராமச் சந்திரனை நம்பிதான் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்கி, குழந்தைகளை உதறிவிட்டு வந் தேன். காலப்போக்கில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தும் பொறுமை யாக இருந்தேன்.

இப்போது, ‘தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன். அதனால் என்னைவிட்டு சென்று விடு’ எனக்கூறி மிரட்டி வந்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என நான் கெஞ்சிப் பார்த்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு கட்டத்தில் என்னை கொல்லவும் துணிந்தார். என் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் வாழ துணிந்த அவரை இனியும் உயிரோடு விடக்கூடாது என நினைத்து கொன்றுவிட்டேன்’ எனக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x