Published : 16 Jan 2024 11:47 AM
Last Updated : 16 Jan 2024 11:47 AM

“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி திருவள்ளுவர்” - ஆளுநர் ரவி ட்வீட்டால் சர்ச்சை

சென்னை: காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024

திருவள்ளுவரை சனாதன பாரம்பரியத்தின் துறவி என்று அவர் குறிப்பிட்டுள்ளதும், காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்திருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் தனது ட்வீட்டில், “திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்திருப்பது கடும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x