Published : 13 Jan 2024 09:42 PM
Last Updated : 13 Jan 2024 09:42 PM

சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் @ காணும் பொங்கல் - முழு விவரம்

சென்னை: காணும்பொங்கலை முன்னிட்டு சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்த தகவலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான போக்குவரத்து காவல்துறையின் செய்தி குறிப்பு: ஜனவரி 17-ம் தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

> காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

> மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

> வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள்: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

  • ஃபோர்ஷோர் சாலை
  • விக்டோரியா வார்டன் விடுதி
  • கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
  • பிரசிடென்சி கல்லூரி
  • மெட்ராஸ் பல்கலைக்கழகம்
  • டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
  • MRTS - சேப்பாக்கம்
  • லேடி வெலிங்டன் பள்ளி
  • ராணி மேரி மகளிர் கல்லூரி
  • சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
  • PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
  • செயின்ட் பீட் மைதானம்
  • அன்னை சத்யா நகர்
  • ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
  • தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x