Published : 10 Jan 2024 04:41 PM
Last Updated : 10 Jan 2024 04:41 PM
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணி என்பவருக்குச் சொந்தமான உணவகம் மற்றும் அதனருகே கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் வருமான வரித் துறை சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளார்கள், அவரது உறவினர், நண்பர்கள் சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறையினர் கடந்த மே மாதம் முதல் பலமுறை சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் (ஜன.12) தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இந்தச் சோதனை நடந்தது.
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணிக்கு சொந்தமான உணவகம் ஒன்று கரூர் கோவை சாலையில் உள்ளது. இந்நிலையில், கோவையிலிருந்து இன்று (ஜன.10) ஒரு காரில் வந்த வருமான வரித் துறை சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் 6 பேர், அந்த உணவகம் மற்றும் அதனருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மணிக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு வந்த குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு பிற்பகல் 1.30-க்கு புறப்பட்டு, கரூர் நகர காவல் நிலையம் பின்புறம் அவர்கள் தங்கியுள்ள விடுதிக்குச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT