Published : 09 Jan 2024 12:58 PM
Last Updated : 09 Jan 2024 12:58 PM

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

சென்னை: தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பொதுத்தேர்வு பாதிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் தெரிவித்தார்.

இததொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கும்போது ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும். இது வழக்கமான ஒன்று. ஏனென்றால் இது மாணவர்கள் நலன் சார்ந்த விஷயம். மார்ச் மாதம் ஆரம்பிக்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு வருடமாக தயாராவார்கள் என்பதால், தேர்வு தேதிக்கு தகுந்தாற்போலவே தேர்தல் தேதி அமையும்.

ஏற்கெனவே ஜாக்டோ - ஜியோ குழுவினர் 12 விதமான கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். நேற்றுகூட இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இன்றும் ஆலோசனை நடக்கவுள்ளது. ஆலோசனையின் முடிவுகளை முதல்வர் மற்றும் நிதித் துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x