Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிமுக அமைச் சரவையில் எப்போதும் அதிமுக் கியத்துவம் தரப்படுவதாக ஏற்கெனவே ஒரு புகைச்சல் இருந்தது.
இதை சரிப்படுத்தும் வகையில் மாநிலங்களவைத் தேர்தலில் அனைத்து சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்திருப் பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுக அமைச்சரவையில் தேவர் சமூகத்துக்கு எட்டு, கவுண்டர் சமூகத்துக்கு ஆறு என பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டுள்ளது.
இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்தான் தென் மாவட்டங்களில் பிள்ளைமார், நாடார், தலித் சாதிகளைச் சேர்ந்த மூவருக்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மாநிலங்களவை இருக்கைகளைப் பகிர்ந்து அளித்திருக்கிறார் ஜெயலலிதா.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா சத்தியானந்த் கிறிஸ்துவ பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் கிறித்தவ திருச்சபை அமைப்புகளின் பின்புலமும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
சசிகலா புஷ்பா நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். தொடக்கத்தில் கணினித் துறை தொடர்பான விஷயங்களில் முதல்வருக்கு உதவியாக இருந்தவர்.
அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்
முத்துகருப்பன் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இன்னொரு வேட்பாளரான சின்ன துரை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான இவர், அனிதா கட்சியை விட்டுச் சென்றபின்பும் அதிமுக-வில் தொடர்பவர்.
அதிமுக-வில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களையே மாநிலங்களவையின் நான்கு இருக்கைகளுக்கும் வேட்பாளர் களாக அறிவித்ததற்கும் அரசியல் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, ஒன்பது தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. அந்த ஒன்பது இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்த முறை அந்த முடிவுகளை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற் காகவே தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையே மாநிலங் களவை உறுப்பினர் வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT