Published : 06 Jan 2024 06:36 AM
Last Updated : 06 Jan 2024 06:36 AM
சென்னை: கிராமப் புறங்களில் விவசாயத்துக்கு இலவசம் என்பதால், தினசரி பகலில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், கிராமப் பகுதிகளில் மாவு ஆலைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இயந்திரங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் என்பவர், தன் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சார வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT