Published : 06 Jan 2024 05:54 AM
Last Updated : 06 Jan 2024 05:54 AM

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? - அன்புமணி கேள்வி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தொடர்பான விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2 மாதங் களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டி ருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத் தடைநீக்கப்பட்ட 2 மாதங்களில் ஓர்ஆசிரியர் ரூ.8 லட்சத்தை இழந்திருக்கிறார் என்றால், ஆன்லைன் சூதாட்டம் தமிழக மக்களை எந்தஅளவுக்கு ஆக்டோபஸ் போன்றுவளைத்திருக்கிறது என்பதை உணர முடியும். ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படவில்லை என்றால், சரவணனைப் போன்று நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்.

அதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆன்லைன்சூதாட்டத் தடை சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததா, இல்லையா என்பதேதெரியவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x