Published : 03 Jan 2024 12:37 PM
Last Updated : 03 Jan 2024 12:37 PM

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிடில் மிகப்பெரிய போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை

சிதம்பரத்தில், பாமக சார்பில் நடந்த சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கில் உரையாற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

கடலூர்: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும், இது எங்களது உரிமை போராட்டம் என்று சிதம்பரத்தில் நடந்த பாமக கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக சார்பில், சிதம்பரத்தில் ‘சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், “நல்ல நிர்வாகம் செய்பவர்கள் மக்கள் பிரச்சினை என்னவென்று கண்டறிந்து தீர்வு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் ஏழே முக்கால் கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள் என்ற கண்டறிவதற்காகதான் நாங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்து மாறு கூறுகிறோம்.

2 ஆயிரம் ஆண்டுகளாக சாதியை வைத்துதான் பாகுபாடு, அடக்கு முறைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது எந் தெந்த சமுதாயம் எந்த நிலையில் உள்ளார்கள் என்று கண்டறிய வேண்டும். இந்தியாவிலேயே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு நமக்கு சாதி அடிப் படையில்தான் கிடைக்கிறது. மதம்,இனம் அல்ல மொழி அடிப் படையிலோ இல்லை. தற்போதுள்ள இந்த இடஒதுக்கீடு 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1931-ல் வெள்ளையர்கள் எடுத்த கணக்கெடுப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளையர் காலத்தில் 100 சதவீத அரசு வேலைவாய்ப்பில் 92 சதவீதம்ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர் களாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைத்ததால், ‘இது சமூக நீதிக்கு எதிரானது’ என சாதி வாரி கணக் கெடுப்பு நடத்தினர். இந்தக் கணக்கெடுப்பை வைத் துதான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 120 ஆண்டுகளுக்கு பிறகும் அதே நிலைதான் உள்ளது.

436 சாதிகள்: 1980-ல் வன்னியர் சங்கத்தை தொடங்கிய போது சாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என முதல் தீர்மானம் கொண்டு வந்தவர் மருத்துவர் ராமதாஸ். அதன் பிறகு முதல்வர்களாக வந்த எம்ஜிஆர், ஜானகி அம்மையார் கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதன் பிறகு பி.சி.அலெக்சாண்டர் ஆளுநர் ஆட்சியின் போது கோரினோம். அப்போது நாங்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை. அவர் அதனை ஏற்று வெங்கடகிருஷ்ணன் கமிஷன் அமைத்தார். அதன் பிறகு 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கமிஷன் கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் 436 சாதிகள் உள்ளன. அந்த சாதிகள் எந்த நிலையில் உள்ளன.? அவர்களுக்கு என்ன இடஒதுக்கீடு வழங்குகிறீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குகிறீர்கள்? நாங்கள் சாதிவாரியாக கணக்கெடுப்பு கோரினால், சாதி அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். சாதி அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் பாமகவுக்கு கிடையாது. எங்களது அரசியல் சமூகநீதி.

ஜெயலலிதாவின் சாதனை: தமிழ்நாடு முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 68-ஆக உயர்த் தினார். கருணாநிதி மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கினார்.

ஜெயலலிதா 1993-94-ல் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத ஒதுக்கீட்டை, பிவி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது அரசியல் அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டுக்கு மட்டும் 9-வது அட்டவ ணையில் அரசியல் சாசன சட்ட திருத்தம் செய்து நமக்கு பாதுகாப்பு கொடுத்தார். அவர் செய்தது பெரிய சாதனை. இதை செய்யாவிடில், அந்த இடஒதுக்கீடு ரத்தாகியிருக்கும். இன்று அந்த இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி நடைமுறைப் படுத்தியுள்ளார். தமிழகம் சமுக நீதிக்கான தொட்டில்; இங்கு முதலில் கணக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இது எங்களது உரிமை போராட்டம் என்றார்.

கூட்டத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மாநில தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையில், “வெள்ளையர்களால் எடுக்கப்பட்ட சாதி வாரியான கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு இப்போது இடஒதுக்கீடு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?. டெல்டா பாசன பகுதியில் விவசாயத்தை மட்டும் நம்பி வசிக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவாக தான் உள்ளனர். சாதி வாரியாக கணக்கெடுத்தால், அந்த விகிதாச்சாரப் படி எங்களுக்கும் சலுகைகள் கிடைக்கும். சமூக நீதி கிடைக்கும்” என்றார்.

கருத்தரங்கில் முன்னதாக சமூக நீதிப்பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வரவேற்று பேசினார். பாமக கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ், மாவட்டத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள் மொழி, பசுமை தாயகம் மாநில செயலாளர் அருள் ரத்தினம், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மாவட்டச் செயலாளர் எம்.ஹமீது கவுஸ்,

நாடார் மக்கள் பேரவை தலைவர் கராத்தே ஏ.பி.ராஜா, தமிழ்நாடு யாதவ் மகாசபை மாநில துணைப் பொதுச்செயலாளர் சேதுமாதவன், பேரா சிரியர் ஆறு.அன்புஅரசன், தமிழ்நாடு கார்கார்த்தார் சங்க கூட்டமைப்பு மாநில துணைத் தவைவர் சிவராஜன், செங்குந்தர் சமுதாய பொது நலச் சங்க தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பாமக மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி நன்றி கூறி னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x