Published : 02 Jan 2024 06:20 AM
Last Updated : 02 Jan 2024 06:20 AM
சென்னை: தமிழகத்தில் 7 டிஐஜிக்கள் ஐஜியாகவும் 10 எஸ்பிக்கள் டிஐஜி-க்களாகவும் 2 ஐஜிக்கள் ஏடிஜிபிகளாக பதவு உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 1999-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெய (2004 பிரிவு), பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டிஐஜி பதவியில் இருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகள் பி.ஆர்.வெண்மதி (2009 பிரிவு), பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி,ஜி.ராமர் (2010 பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டன்ட் (எஸ்.பி) பதவியில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்தார். புத்தாண்டு பரிசு போன்று இந்தபதவி உயர்வு அமைந்துள்ளது. இவர்களுக்கான பணியிடம் விரைவில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT