Published : 29 Dec 2023 05:43 AM
Last Updated : 29 Dec 2023 05:43 AM

தேர்தல் போட்டியிலிருந்து எனக்கு ஓய்வு கொடுங்கள்: கட்சியினருக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேண்டுகோள்

திருச்சி: இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தார். இதில், பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

இந்தக் கூட்டத்தில் பாரிவேந்தர் பேசியது: தமிழகத்தில் எங்கும் ஊழல் நிலவுகிறது. இதனால் ஆளும் கட்சியான திமுக மீது மக்கள்வெறுப்பில் உள்ளனர். பிற கட்சியினர் ஊழல் செய்து வளமாக வாழ்வதைப் பார்த்து, நம் கட்சியினர் ஏக்கம் கொள்ள வேண்டாம். உண்மை, நேர்மை, உழைப்புக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

வரும் மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியின் தலைமையில் 3 தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து எனக்கு நீங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தேசியக் கட்சியுடன் ஐஜேகே கூட்டணி வைத்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென்சென்னை தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். அவர்களும் அந்த 3 தொகுதிகளை ஒதுக்குவோம் என உறுதியளித்துள்ளனர்.

தங்களது கூட்டணிக்கு வருமாறு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன.எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்கஜனவரி அல்லது பிப்ரவரியில்மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இடம், தேதி குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு பாரிவேந்தர் தெரிவித்தார்.

பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழக அரசு மத்தியஅரசை நட்புடன் அணுகி, தேவையான நிதியைப் பெற வேண்டும். கச்சத்தீவை மத்திய அரசு மீட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். வேங்கைவயல் சம்பவ குற்றவாளிகளை கண்டறிந்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x