Published : 29 Dec 2023 04:04 AM
Last Updated : 29 Dec 2023 04:04 AM

ஆண்டுதோறும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த விஜயகாந்த் | நினைவலை

மதுரை: மறைந்த விஜயகாந்த் தனது குலதெய்வக் கோயிலுக்கு வருவதை ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், ஆண்டாள் பக்தராகவும் திகழ்ந்தார் என தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோயில்தான் விஜயகாந்த்-தின் குலதெய்வம். திரைப்படம், அரசியலில் பரபரப்பாக இருந்த போதிலும், ஆண்டுதோறும் குறிப் பிட்ட ஒரு நாளில் குலதெய்வக் கோயிலுக்கு வந்து செல்வார். மதுரைக்கு வந்தாலே குலதெய்வ கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் வர முடியாத சூழலிலும் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் தென் மாவட்டங்களுக்கு வந்தபோ தெல்லாம் குலதெய்வக் கோயி லுக்குச் செல்வது வழக்கம். 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கிய போது கட்சி அழைப் பிதழை குலதெய்வக் கோயிலில் வைத்து வழிபட்டார். விஜயகாந்த்-தின் தாயார் பெயர் ஆண்டாள் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது அதிக பற்றுக்கொண்டவராக இருந்தார்.

அடிக்கடி அக்கோயிலுக்கும் சென்று வந்தார். 2013-ம் ஆண்டு ஆண்டாள் கோயிலுக்கு மனைவி பிரேமலதாவுடன் சென்றபோது, அந்தக் கோயில் கோபுர விமானத்தை தங்க விமானமாக மாற்றுவதற்கு ஒரு கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கினார். தனது பொறியியல் கல்லூரிக் கும் பெற்றோர் பெயர்களான ஆண்டாள்-அழகர் என பெயர் சூட்டினார்.

மதுரையில் அவர் தொடங்கிய திரைப்பட விநியோக நிறு வனத்துக்கும் ஆண்டாள் பிலிம்ஸ் என பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x