Published : 29 Dec 2023 12:51 AM
Last Updated : 29 Dec 2023 12:51 AM
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை காலை காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நள்ளிரவு கடந்தும் கண்ணீர் மல்க பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி, பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு செய்தி தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களையும் கலங்க செய்துள்ளது. அதனால் அவரது உடலுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 முதல் மதியம் 1 மணி வரையில் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...