Published : 28 Dec 2023 12:36 PM
Last Updated : 28 Dec 2023 12:36 PM
சென்னை: “கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரபலங்கள், கட்சி தலைவர்கள் உள்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமித் ஷா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.
நீண்ட காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் இன்று காலை மறைந்தார். விஜயகாந்த் மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் தேமுதி கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT