Published : 27 Dec 2023 06:53 AM
Last Updated : 27 Dec 2023 06:53 AM
சென்னை: சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதே இதற்கு காரணம் என தகவல்.
பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதையடுத்து தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்துள்ளது.
தற்போது பாதிப்பின் சீற்றம் குறைந்துள்ள நிலையில் மக்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு திரும்ப தொடங்கியதாகவும் தகவல். அதே நேரத்தில் இந்த பாதிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதோடு இனி இது போல ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
While Ennore residents are still reeling with the #OilSpill and its impacts, there is a suspected ammonia #gas #Leak from Coromandel Fertilizer Factory in Periakuppam, #Ennore. A number of people have been impacted and people are trying to leave the village to escape the leak. https://t.co/ehXqD0OfYf pic.twitter.com/BCzKQfelKB
— CCAG (@CCAGofficial) December 26, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT