Published : 27 Dec 2023 05:19 AM
Last Updated : 27 Dec 2023 05:19 AM

நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார் | படம்: எஸ். குரு பிரசாத் (உள்படம்: துணைவேந்தர் ஜெகநாதன்)

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் மீது மேலும் சில புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீதும் வழக்குகள் பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், வழக்கு விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x