Published : 22 Dec 2023 05:43 AM
Last Updated : 22 Dec 2023 05:43 AM

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம்தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

21-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 9 செமீ, திருக்குவளையில் 7 செமீ, தலைஞாயிறில் 5 செமீ, திருப்பூண்டி, மயிலாடுதுறை ஆகியஇடங்களில் தலா 4 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை, தரங்கம்பாடி, கோடியக்கரை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x