Last Updated : 01 Jan, 2018 09:04 AM

 

Published : 01 Jan 2018 09:04 AM
Last Updated : 01 Jan 2018 09:04 AM

ரஜினிகாந்தை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்த பெங்களூரு ரசிகை

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பிறகு, ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது, பெங்களூரு ரசிகை பாரதி ரஜினியைக் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பெங்களூர் மல்லேசுவரத்தைச் சேர்ந்த இவர் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சனிஸ்ட்டாகப் பணியாற்றுகிறார். இவரது கணவர் பெங்களூரில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். தீவிர ரஜினி ரசிகையான பாரதிக்கு ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்டகால கனவு.

மிகுந்த ஆர்வத்துடன் மண்டபத்துக்கு வந்த பாரதிக்கு அனுமதி கிடைக்கவில்லை. அன்று திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் போய் தங்கினார். அடுத்தடுத்து 5 நாட்களும் மண்டபத்துக்குள் செல்ல முடியாமல் வேதனைப்பட்ட பாரதிக்கு, கடைசி நாளான நேற்று அனுமதி கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தார்.

மண்டபத்தில் ரஜினி வருகைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த பாரதி, மேடையில் ரஜினிகாந்த் தோன்றியதும் ஆர்வ மிகுதியால் சேர் மீது ஏறி தலைவரைப் பார்த்து மகிழ்ந்தார். ரஜினியிடம் வழங்க வேண்டும் என்பதற்காக மரம் போன்ற தோற்றத்தில் ரஜினிகாந்த் ஓவியம் வரைந்து கொடுத்த தனது மகளின் ஓவியத்தை கையில் எடுத்து வந்தார் பாரதி. ஆனால், அந்த ஓவியத்தை மேடையில் எடுத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x