Published : 19 Dec 2023 04:54 PM
Last Updated : 19 Dec 2023 04:54 PM

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்க சிறப்பு குழுக்கள்: அரசு தகவல்

இடம்: தூத்துக்குடி பி.டி.காலனி | படம்: என்.ராஜேஷ்

சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி கி.செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;

  • இரா.ஐஸ்வர்யா, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830
  • ஓ. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803
  • எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தொலைபேசி எண். 9442218000. அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

  • சீ. கிஷன் குமார், , உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண். 9123575120
  • ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி எண். 9940440659

இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், பெ. அமுதா செயல்படுவார்.நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x