Published : 08 Jul 2014 09:00 AM
Last Updated : 08 Jul 2014 09:00 AM
தஞ்சாவூர் விளார் பகுதியில் நான்கு வழிச் சாலையையொட்டி, இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் நினைவாக ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ அமைக்கப்பட்டது.
இதன், முன்புறத்தில் போரில் உயிரிழந்தவர்கள், போரை நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து உயிர் நீத்தவர்கள், போர் அவலக் காட்சிகள், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன்கள், தமிழ்த் தாய் உருவம் ஆகியன கருங்கல் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இதன் முகப்பில் 50 அடி நீளத் துக்கு செங்கல் சுவர் எழுப்பி, அதன்மீது போர் அவலக் காட்சி களை சித்தரிக்கும் உலோக வார்ப்பு சிற்பத்தை அமைப்பதற்காக சென்னையைச் சேர்ந்த கராத்தே மாஸ்டரும் சிற்பக் கலைஞருமான ஷிகான் ஹுசைனியிடம் ரூ.90 லட்சத் துக்கு ஒப்பந்தம் பேசி, ரூ.50 லட்சம் முன் பணமாக அளிக்கப்பட்டதாம்.
இந்நிலையில், இந்தப் பணியை வழங்கிய நடராஜன் வீட்டுக்குச் சென்று மீதிப் பணம் கேட்கச் சென்ற தன்னை, நடராஜன் உள்ளிட்ட 5 பேர் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஜூன் 27-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஹுசைனி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இருந்த நடராஜனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்துள்ள தாகக் கூறப்படுகிறது.
நடந்த நிகழ்வின் பின்னணி…
இதுகுறித்து முள்ளிவாய்க்கால் முற்றம் நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஹுசையினியிடம் ரூ.90 லட்சத்துக்கு உலோக வார்ப்பு சிற்பம் செய்ய ஒப்பந்தம் போட்டது உண்மை. ஆனால், சிற்பம் செய்து தருவதாகக் கூறி ரூ.50 லட்சத்தை வாங்கிச் சென்ற உசைனி, சில மாதங்கள் கழித்து ஃபைபரில் வடிவமைக்கப்பட்ட 9 கை வடிவங்களை மட்டுமே கொண்டு வந்து காட்டினார். அவை, முன்பு கனிமொழியால் நடத்தப் பட்ட சங்கமம் நிகழ்ச்சிக்காக உசைனியால் செய்து தரப்பட்ட வடிவங்கள் என்பதை அறிந்த நாங்கள், ஒப்பந்தபடி உலோகத் தாலான சிற்பங்களை செய்துதரும் படி கோரினோம்.
ஹுசைனி, ஏதேதோ காரணங்களைச் சொல்லி விட்டு புதிதாக உலோகத்தில் செய்து தருவதாகக் கூறிச் சென்றார். ஆனால், உறுதியளித்தபடி ஹுசைனி வராததால் முற்றத்தில் கருங்கல் சிற்பங்களை வடித்துக் கொண்டிருந்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி முருகனைக் கொண்டே கருங்கல் சிற்பச் சுவராகவே உருவாக்கி விட்டோம்.
அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் எங்களுக்கும் நடராஜனுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாலும், உசைனி தனது உடலிருந்து 7 லிட்டருக்கு மேல் ரத்தம் சேகரித்து அதை உறைய வைத்து ஜெயலலிதாவின் உரு வத்தை உருவாக்கி தனது விசுவா சத்தை காட்டியதாலும் அவரிடம் இப்போது பணத்தை திரும்பக் கேட்டால் புதியதொரு பிரச்சினை உருவெடுக்கலாம் என்பதால் நாங்கள் தயங்கி வந்தோம்.
இந்நிலையில், வாங்கிய பணத்தை திரும்பத்தாருங் கள் என உசைனியிடம் கேட்டோம். பணத்தை திரும்பத் தருவதிலிருந்து தப்பிப் பதற்காகவே இதுபோன்ற பொய் புகாரை ஹுசைனி அளித் துள்ளார். ஒரு ரூபாய் மதிப்பு சிற்பத்தைக்கூட வடித்துத்தராத அவர், ரூ.50 லட்சத்தை எங்களிடமிருந்து மோசடி செய்ததோடு எங்கள் மீது புகாரும் அளித்துள்ளது வேதனை யாக உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT