Published : 04 Dec 2023 03:40 PM
Last Updated : 04 Dec 2023 03:40 PM

மிக்ஜாம் புயல் எதிரொலி | சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

அதன்படி, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி - சென்னை இடையேயான முத்துநகர் ரயில் இன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் ரயில், மதுரை - சென்னை தேஜஸ் ரயில் ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரம்:

1.இன்று 4ஆம் தேதி புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு ரயில் (ரயில் எண்: 12671 ).
2. இரவு 10 மனிக்கு புறப்படும் சென்னை சென் ட்ரல் - கோயமுத்தூர் சேரன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12673)
3. சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் (ரயில் எண் 20601)
4. சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா அதிவிரைவு ரயில் (ரயில் எண் 22639)
5. சென்னை சென்ட்ரல் - மைசூரு காவேரி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 16021).
6. செங்கல்பட்டில் இருந்து இன்று பிற்பகல் 3.35க்கு புறப்படவிருந்த செங்கல்பட்டு - கச்சிகுடா அதிவிரைவு ரயில் (ரயில் எண் 17651)
7. இன்றிரவு 7.45 மணிக்கு புறப்படவிருந்து சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (ரயில் எண் 12623)
8. இன்றிரவு 10.50 மணிக்கு புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் -கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் (ரயில் எண் 12657)
9. இன்றிரவு 11 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு அதிவிரைவு ரயில் (ரயில் எண் 22649).
10. சென்னை சென்ட்ரல் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில். (ரயில் எண் 22651)
11. சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே இன்றிரவு 11.40 மணிக்குப் புறப்படவிருந்த ரயில் (ரயில் எண் 12027)
12. நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16102) ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x