Published : 09 Jan 2018 05:07 PM
Last Updated : 09 Jan 2018 05:07 PM
கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 6-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் பண்ருட்டியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தினர். பின்னர் சிறிது நேரத்திலேயே கலைந்துசென்றனர். இதேபோன்று பண்ருட்டியிலும் பணிமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிலும் ஏராளமான போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT