Published : 21 Nov 2023 06:15 AM
Last Updated : 21 Nov 2023 06:15 AM
சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் வரும் 26-ம் தேதியும், 27-ம்தேதி பவுர்ணமி என்பதாலும் லட்சக்கணக் கானோர் திருவண்ணாமலைக்குச் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலைக்கு சொந்த வாகனங்களில் செல்லும்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் நவ.25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் 50 எண்ணிக்கையிலான குளிர்சாதன வசதியுடன் கூடியஇருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் திருவண்ணாமலை சென்றுவர சிறப்பு பேருந்துகள் நவ.24 முதல் 26-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. எனவே பக்தர்கள் www .tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT