Published : 18 Nov 2023 04:43 AM
Last Updated : 18 Nov 2023 04:43 AM
சென்னை: 3-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம்அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்து சிறையில் மீண் டும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நவ.15-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் திடீர்உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பித்தப்பையில் கற்கள்: அங்கு, அவருக்கு இதயவியல், நெஞ்சகவியல், நுரையீரல், ஜீரணமண்டலத் துறை, நரம்பியல் துறை மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘செந்தில் பாலாஜிக்கு இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பல்வேறு ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. அதேவேளையில் பித்தப்பையில் கொழுப்புச் சத்து சேர்ந்து கற்களாக மாறியுள்ளன.
மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், எம்ஆர்ஐ பரிசோதனைகள், ஜீரண மண்டல பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ள வேண்டி யுள்ளது. அதன் பிறகே அவரை மருத்துவமனையிலிருந்து அனுப்பு வது குறித்து முடிவெடுக்கப்படும்,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT