Published : 18 Nov 2023 06:01 AM
Last Updated : 18 Nov 2023 06:01 AM
சென்னை: தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எம்ஜிஎம் குழுமம், தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர்களாக எம்ஜிஎம் மாறன், எம்ஜிஎம் ஆனந்த ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின்கீழ் ஏற்கெனவே, எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அதனடிப்படையில், பலகோடி மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியிருந்தது. தற்போதுஎம்ஜிஎம் குழுமத்தின் பங்கு களையும் முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்தியில், எம்ஜிஎம் குழுமத்தின் சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ், எம்ஜிஎம் என்டர்டெயின்மென்ட், எம்ஜிஎம் டைமண்ட் பீச்ரிசார்ட், ஆனந்த் டிரான்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களில் எம்ஜிஎம் மாறன், எம்ஜிஎம் ஆனந்த் ஆகியோரின் 100 சதவீத பங்குகள்அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் உள்ள எம்ஜிஎம் மாறனின் 52 லட்சத்து 39,959 மதிப்பிலான 3.31 சதவீத பங்குகளையும் முடக்கியுள்ளதாக கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT