Published : 18 Nov 2023 06:20 AM
Last Updated : 18 Nov 2023 06:20 AM
சென்னை: ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு’ கையேட்டை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று வெளியிட்டதுடன், வலை தளத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவத்துறையின் எதிர்காலம் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜன.19 முதல் 21 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது நாட்டிலேயே மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாகும். இதில், மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அதிநவீன அமர்வுகள் நடைபெறும். தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தங்கள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தெரிவிப்பார்கள்.
இதில், மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தொடர்பான 6 அமர்வுகள் இருக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகியநாடுகளிலிருந்து 23 சர்வதேச வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பணியாற் றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்து வர்கள் பங்கேற்கின்றனர்
சிறப்பு விருந்தினராக டபிள்யு ஹெச்.ஓ இயக்கு நர் டெட்ரோஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். வெளிநாடுகள் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் நாராயணசாமி, தமிழக சுகாதார அமைப்பின் திட்ட இயக்கு நர் ம.கோவிந்தராவ் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT