Published : 12 Nov 2023 06:07 AM
Last Updated : 12 Nov 2023 06:07 AM

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு: அன்புமணி, கி.வீரமணி வலியுறுத்தல் 

சென்னை: ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி மற்றும் திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி,24 மணி நேரம் கூட முடிவடைய வில்லை. அதற்குள் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டன. அதற்கேற்ப அனைத்து செல்போன் எண்களுக்கும் ஆன்லைனில் ரம்மி ஆடினால், ரூ.1 கோடியுடன் 1 கிலோ தங்கமும் பரிசு என்று குறுஞ்செய்தி மூலம் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்தை எதிர்த்து தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம் என்றுதமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். எனவே சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஆன்லைன் சூதாட்டத்தில் தங்களது பணத்தை இழந்துதற்கொலை செய்துகொண்ட வர்கள் பலர். அதன் காரணமாகவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய பல கட்சிகளும், இயக்கங்களும் வற்புறுத்தின. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,ரம்மி போன்ற விளையாட்டுகள் மீதான தடை செல்லாது எனசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்திருப்பது ஏற்புடையதல்ல. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x