Published : 11 Nov 2023 04:46 AM
Last Updated : 11 Nov 2023 04:46 AM

அவதூறு பரப்பிய கேரளப் பெண் ரூ.1 கோடியை மான நஷ்டஈடாக வழங்க வேண்டும்: சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் ரூ. 1 கோடியை சம்பந்தப்பட்ட பெண், விஜயபாஸ்கருக்கு மான நஷ்ட ஈடாக வழங்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய ரூ. 14 கோடியில் ரூ. 3 கோடியை மட்டும் திருப்பி அளித்துவிட்டு ரூ.11 கோடியை ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும், எனவே அவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் நெல்லை காவல் ஆணையரிடம் 2021-ம் ஆண்டு புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக ஷர்மிளா சமூக ஊடகங்கள் மூலமாகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து ஷர்மிளாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர். ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் அவ தூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் வழக்கறிஞர்கள் நித்யேஷ் நட்ராஜ், வைபவ் அனிருத் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, மனுதாரரான சி.விஜயபாஸ்கர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கரோனா தொற்றுகாலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் ஷர்மிளா தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இனி இதுபோன்ற அவதூறு கருத்துகளை வெளியிடக்கூடாது. அத்துடன், விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இழப்புக்கு மான நஷ்டஈடாக ரூ. 1 கோடியை ஷர்மிளா வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x