Published : 10 Nov 2023 09:38 PM
Last Updated : 10 Nov 2023 09:38 PM
கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை - திண்டுக்கல் இடையே வரும் 14-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை (நவ.11) முதல் வரும் 14-ம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06077), மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06078), மாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். செல்லும் வழியில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரபட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைபட்டி ஆகிய ரயில்நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT