Published : 10 Nov 2023 04:50 PM
Last Updated : 10 Nov 2023 04:50 PM

2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்

சென்னை: வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் "விளக்கம்" என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக்கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழக அரசு இதனால் அறிவிக்கிறது.

  • ஜன.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு
  • ஜன.15 - திங்கட்கிழமை - பொங்கல்
  • ஜன.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்
  • ஜன.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்
  • ஜன.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்
  • ஜன.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்
  • மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
  • ஏப்.1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
  • ஏப்.9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு
  • ஏப்.11 - வியாழக்கிழமை - ரம்ஜான்
  • ஏப்.14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
  • ஏப்.21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி
  • ஏப்.21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்
  • ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்
  • ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்
  • ஆக.15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
  • ஆக.26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
  • செப்.7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
  • செப்.16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி
  • அக்.2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி
  • அக்.11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை
  • அக்.12 - சனிக்கிழமை - விஜய தசமி
  • அக்.31 - வியாழக்கிழமை- தீபாவளி
  • டிச.25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்

தமிழகத்திலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x