Last Updated : 09 Nov, 2023 10:10 AM

 

Published : 09 Nov 2023 10:10 AM
Last Updated : 09 Nov 2023 10:10 AM

புதுச்சேரியில் நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணம் ரூ 10 முதல் ரூ. 30 வரை உயர்வு

புதுச்சேரி: திரையரங்குகளில் கட்டணம் உயர்த்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணம் உயர்கிறது.

கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் 2020 ஆம்ஆண்டு அக்.15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் போது மக்கள் நலன் கருதி டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அண்மையில் அரசுக்கு மனு அளித்தனர். .இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார். இதன்படி 3ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்கிறது. 2ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், முதலாம் வகுப்பு 100 ல் இருந்து 130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது..பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாய் என உயர்த்தப்படுறது.

இந்தக் கட்டண உத்தரவு நாளை (வெள்ளிகிழமை)முதல் அமலுக்கு வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x