Published : 30 Jul 2014 10:34 AM
Last Updated : 30 Jul 2014 10:34 AM
ரம்ஜான் பண்டிகை நாளில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால் பூர் உள்ளிட்ட இடங்களுக்கும் கடற்கரை வேளச்சேரி மார்க் கத்திலும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவற்றில் பயணிக் கின்றனர்.
ரம்ஜான் விடுமுறை நாள் என்பதால், சென்னை கடற் கரை - தாம்பரம் உள்பட அனைத்து மார்க்கங்களிலும் செவ்வாய்க் கிழமை ரயில் சேவை குறைக்கப் பட்டது. சென்னை - திருவள்ளூர் மார்க்கத்தில் கொரட்டூர் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக 50 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பயணி சேகர் கூறுகையில், ‘‘கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைப்பதால் 50 ரயில் சேவை கள் ரத்து செய்யப்பட்டன. இயக்கப் பட்ட ரயில்களும் அம்பத்தூர், திருமுல்லைவாயல், கொரட்டூர், பட்டரைவாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கவில்லை. இதனால், அந்த ரயில் நிலையங் களில் காத்திருந்த பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டதால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் ரயில் ஏற சிரமப்பட்டனர்’’ என்றார்.
சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த பயணி சாந்தா கூறும்போது, ‘‘ரம்ஜான் பண்டிகைக்கு தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை. இதனால், தனி யார் நிறுவனங்களில் பணியாற்று பவர்கள் வழக்கம்போல வேலைக் குச் சென்றனர். பொருட்கள் வாங்க ஏராளமானோர் மாம்பலம் சென்ற னர். ஞாயிற்றுக்கிழமை அட்ட வணைப்படி குறைவான ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT