Published : 03 Nov 2023 05:04 AM
Last Updated : 03 Nov 2023 05:04 AM

மேகாலயா தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை

சென்னை: மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சமீபத்தி்ல் ஓய்வு பெற்றார்.

அதையடுத்து மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் எஸ்.வைத்தியநாதனை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கோவையில் 1962 ஆக.17-ல் பிறந்தார். டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1986-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x