Published : 03 Nov 2023 06:12 AM
Last Updated : 03 Nov 2023 06:12 AM
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மாநகரப்போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய, டெண்டர் பெறப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகங்களில் முறையான பயிற்சியும், சான்றிதழும் பெற்றிருந்தும் ‘இந்திய சாலைப் போக்குவரத்து’ நிறுவனம்மூலம் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கும் ஓட்டுநர்கள்தான் பேருந்தை இயக்கி வருகிறார்கள்.
உரிய பயிற்சியும், சான்றிதழும் பெற்று, அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு நேரடியாக நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.
ஒப்பந்த நிறுவனங்கள் மூலம்,ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டால், பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, பயிற்சி பெற்ற, முன் அனுபவம் உள்ளஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT