Published : 02 Nov 2023 05:27 AM
Last Updated : 02 Nov 2023 05:27 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி, இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06012/11) வரும் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில், வரும் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (2-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
பாலக்காடு மண்டலத்தில் கடவுப் பாதை குறுக்கே சாலை மேம்பால பணி நடப்பதால் சென்னை சென்ட்ரல் - மங்களூருவெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் (வண்டி எண்.22637) நவ.2, 3, 5, 6மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாமதமாக இயக்கப்படும்.
இதன்படி, இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்குப் புறப்படும்.
மறுமார்க்கத்தில், இந்த ரயில் (22638) நவ.2, 3, 4, 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மங்களூருவில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 2.50 மணி நேரம் காலதாமதமாக அதிகாலை 2.35 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT