Published : 30 Oct 2023 08:08 AM
Last Updated : 30 Oct 2023 08:08 AM

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை: முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி இன்று வருகை - பாதுகாப்பு தீவிரம்

பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, தேவர் நினைவிடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் சு.செல்வராஜ். உடன், ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர்.

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும் பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குரு பூஜை விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்து கின்றனர்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குரு பூஜை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டத்துடன் வந்தும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பசும் பொன்னில் இன்று நடை பெறும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, உதயநிதி, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, அர.சக்கர பாணி, பழனிவேல் தியாகராஜன், கே.ஆர்.பெரியகருப்பன், பெ.சுவாமி நாதன், பெ.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்து கின்றனர். அதே போல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் மரியாதை செலுத்து கின்றனர்.

பசும் பொன்னில் கூட்டத்தைக் கண்காணிக்க நவீன ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் 5 டிஐஜிக்கள், 25 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 12,000 போலீஸார் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, முதல்வர் வருகையையொட்டி நினைவிடத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலர் சு.செல்வ ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x