Published : 26 Oct 2023 05:35 AM
Last Updated : 26 Oct 2023 05:35 AM
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார்.
நாளை காலை அவரை முக்கிய பிரமுகர்கள் சந்தித்துபேசுகின்றனர். பின்னர், கிழக்குகடற்கரை சாலையில் உள்ளஇந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வதுபட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
பிற்பகல் 12.05 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக, விமான நிலையத்தில், அவரை ஆளுநர்,முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் வழியனுப்பி வைக்கின்றனர்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, விழா நடைபெறும் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT