Published : 21 Oct 2023 05:45 AM
Last Updated : 21 Oct 2023 05:45 AM

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க உதவி எண்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், ப்ரீமியம் வகை பேருந்துகள் ஆகியவற்றில் இருக்கை, படுக்கை வசதிகொண்டவை என 6 வகையான பேருந்துகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வழித்தடத்துக்கும் கட்டணம் வேறுவிதமாக இருக்கும்.

பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப்படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர். இந்தப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பேருந்துகளைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த தொழிலுக்கு எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை. இந்தத் தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

ஆம்னி பேருந்துகளுக்கென்று மத்திய மற்றும் மாநிலஅரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்தபோதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர்ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம்.

ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x