Published : 21 Oct 2023 06:10 AM
Last Updated : 21 Oct 2023 06:10 AM

காவிரி விவகாரம் | கூட்டணிக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் கர்நாடக காங்கிரஸ் அரசை காப்பாற்றும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதா? - ஜி.கே.வாசன் கேள்வி

திருவண்ணாமலை: காவிரி விவகாரத்தில் கூட்டணிக் காகவும், வாக்கு வங்கிக்காகவும் கர்நாடக காங்கிரஸ் அரசை காப்பாற்றும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதா? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன் , செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெண்கள் வழிபாட்டுக்கு, அவர்களின் முன் னேற்றத்துக்கு கோட்பாட்டை ஏற்படுத்தியவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார். அவரது மறைவு என்பது ஆன்மிகத்துக்கு மிகப்பெரிய இழப்பு.

ஆன்மிகம் மட்டும் இல்லாமல் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் மாணவர் களின் வாழ்க்கை தரத்தை உயர்த் தும் புனித பணியை, உயர்ந்த பணியை இறுதி மூச்சு வரை செய்து வந்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறி யாகவே உள்ளது. இதற்கு, முற்று புள்ளி வைக்க வேண்டிய கடமை, ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் பல இடங்களில் போராட் டத்தை வலுவாக நடத்தி வரு கின்றனர். வாக்குறுதியை நிறை வேற்றவில்லை என கேள்வி கேட்கும்போது, அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றதான், உங்களுக்கு மக்கள் வாக்களித்தனர் என நினைவில் கொண்டு செயல்படவேண்டும். திமுகவுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

காவிரி பிரச்சினையில் விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. கர்நாடக முதல்வர், அமைச்சருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி யாக பேச வேண்டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தொலைபேசியில் கூட பேசவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. அரசு மீது விவசாயிகளுக்கு சந் தேகம் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் காகவும், வாக்கு வங்கிக்காகவும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசை காப்பாற்றும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள காங் கிரஸ் தலைமையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கலாம். அதன் மூலம் அவர்கள் அழுத்தம் கொடுத்திருக் கலாம். இது பயிர் பிரச்சினை இல்லை. விவசாயிகளின் உயிர் பிரச்சினை. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் கருகியிருப்பதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஏக்கருக்கு ரூ.12,500 இழப்பீடு என்பது போதாது. ரூ.30 ஆயிரத்தை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தமிழக அரசின் செயல் உள்ளது. விவசாயிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயல்பட தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர்.

பாஜக தலைமையிலான ஆட்சியை தமாகா ஆதரிக்கிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் நட்பு கட்சியாக, நலன் விரும்பும் கட்சியாக தொடர்ந்து செயல்படும். இந்திய அளவில் பாஜக வலு வான கட்சி. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கலாம். ஆனால், வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். நட்பு கட்சி என்ற அடிப்படையில், இரு கட்சிகளுடன் அரசியல் குறித்து அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

தேர்தல் நேரத்தில் தொண்டர்களின் மனநிலையை கட்சிகள் பிரதிபலிக்கும். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில், வலுவான கூட்டணி ஏற்படும் என்பது தமாகா வின் நம்பிக்கை. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், வெளி யேறும் கட்சிகள் குறித்து, தை பிறந்தால் வழி பிறக்கும்.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவ சாயிகளுக்கு வழங்க வேண் டிய நிலுவை தொகையை அருணாச்சலா சர்க்கரை நிர்வாகம் வழங்க வேண்டும். செய்யாற்றை தூய்மைப் படுத்த அவசர நடவடிக்கை தேவை. அண்ணாமலையார் கோயில் உலக பிரசித்திப் பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கிரிவலம் பெருமையை அனைவரும் அறிந்தது. அண்ணா மலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x