Published : 21 Oct 2023 05:48 AM
Last Updated : 21 Oct 2023 05:48 AM
சென்னை: புதுச்சேரியில் நடைபெற்ற இயற்கை வாழ்வியலும் தமிழ் மருத்துவமும் என்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ் நிறுவனம் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சித்வா குரூப் ஆஃப் கம்பெனியின் நிறுவனர் டாக்டர் எஸ்.வி.விஜயராகவ் வரவேற்றார். புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா மருந்து உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனரும், புதுவை-தமிழகத்தில் உள்ள தி சுசான்லி குழுமத்தின் நிறுவனர் - சேர்மேனுமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி, இந்திய மருத்துவ முறையின் மாநில இயக்குநர் டாக்டர் ஆர்.ஸ்ரீதரன், மாநில மருந்து கட்டுப்பாட்டு மற்றும் உரிமம் வழங்கல் அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன், ஹரியாணாவில் இருந்து சுமன்ட் விர் கபூர், புதுச்சேரி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பி.ராஜ
லட்சுமி. ஊடகவியலாளர் ப.ஆசைத்தம்பி, மை வீத்ரி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சக்தி ஆனந்தன் ஆகி
யோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் பேசும்போது, ``சித்வா நிறுவனம் பண்டையகால மருந்துகளை உணவாகத் தந்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. நிறுவனர் விஜயராகவ் இன்னும் பல பாரம்பரிய உணவு பொருட்களை ஆராய்ச்சி செய்து, மக்களுக்கு வழங்க வேண்டும்'' என்றார்.
விரைவில் மூலிகை நூடுல்ஸ் போன்றவையும் வருவதாக சுசான்லி டாக்டர் ரவி தெரிவித்தார். டாக்டர் விஜயராகவ் தமது சித்வா நிறுவனத்தின் மூலமாக இன்னும் பல்வேறு மூலிகை உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதாகத் தெரிவித்ததுடன், விழா நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக அமைந்தது என்றால், அதற்கு தான் மட்டும் காரணமல்ல சித்தர்களும், இறையருளும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மை வீத்ரி ஏட்ஸ் நிறுவனத்துக்கு `சிறந்த சுகாதார பராமரிப்பு நிறுவனம்' என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT