Published : 20 Oct 2023 01:51 PM
Last Updated : 20 Oct 2023 01:51 PM

நாடு முழுவதும் செல்போனில் பறந்தது ‘எமர்ஜென்சி அலர்ட்’ - மக்கள் அச்சமடைய தேவையில்லை என வேண்டுகோள்

சென்னை: அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக ’செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்னும் அதிநவீன தொழில்நுட்ப சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு, அரசு அபாய எச்சரிக்கை ஒலியுடன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியது.

செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' என்பது ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து அலைபேசிகளுக்கும் பேரிடர் குறித்த எச்சரிக்கை செய்திகள் ஒரே நேரத்தில் சென்றடைய கூடிய வசதி ஆகும். இன்று நாடு முழுவதும் 11 மணி அளவில் இந்த எச்சரிக்கை சோதனை முயற்சியாக செய்து பார்க்கப்பட்டது. இது சோதனை முயற்சி தான். மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

செல்போனுக்கு அனுப்பட்ட குறுஞ்செய்தியில், “இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்தச் செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நேரமுத்திரை: 20-10-2023 11:51 AM 12’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x