Published : 19 Oct 2023 07:50 AM
Last Updated : 19 Oct 2023 07:50 AM

காமராஜர் துறைமுக நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார போட்டிகள்

சென்னை: காமராஜர் துறைமுக நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும்ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம். ‘ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்புவிழிப்புணர்வு வாரம்-2023’ வரும்30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிவரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான காமராஜர் துறைமுக நிறுவனம், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ‘ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி’ எனும்கருப்பொருளில், ஊழல் எதிர்ப்புகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரப்பும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் 6 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல்12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.

இதேபோல, பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ‘ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி’ என்ற தலைப்பில் 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (pdf, jpeg, png-size: upto 5MB) எழுதி, https://www.htamil.org/kpl2023 என்ற லிங்க்-ல் வரும் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99402 68686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

போட்டியில் பங்கேற்க...

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் https://www.htamil.org/kpl2023 என்ற ஆன்லைன் லிங்க்-ல் பதிவு செய்யலாம். அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x